கடந்த இரண்டு நாட்களாக கிடைத்த நேரத்தில் எப்படியோ நண்பர் திரு.பிரபாகர் மூலம் கிடைத்த இரண்டு திரைப்படங்களை பார்த்துவிட்டேன்... இது தவிர பல நாட்களாக நான் படிக்க நினைத்த புத்தகமும் இன்று 75% படித்து முடித்துவிட்டேன்.
வால்கிர்
இந்த படம் ஹிட்லரை கொல்ல நடந்த முயற்சியில் எற்பட்ட தோல்வி பற்றிய படம், இரண்டாம் உலக போர் சமயம் ஜெர்மனியர் அனைவரும் நாஜிக்கள் என்கிற எண்ணத்தைதான் இதுவரை நாம் படித்த வரலாறு கூறியுள்ளது. ஆனால், இந்த படம் ஹிட்லர் தவிர அந்த நாட்களில் ஜெர்மனியில் மிதவாதிகளும் இருந்தனர் என்பதை உணர்த்திய படம்.
இரண்டாம் உலகபோரில் நாஜிப்படையில் பணிபுரியும் வீரனாக டாம்க்ரூஸ் வருகிறார், போரின் போது குண்டடிப்பட்டு வலது மணிக்கட்டுக்கு கீழே கையும், இடது கைகளில் இரண்டு விரல்களையும் இழந்து மீண்டும் பணியினை தொடர்கிறார்.
இதனிடையே ஹிட்லரை கொல்ல நடந்த ஒரு முயற்சி தோல்வியில் முடிய, சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த பணி டாம்க்ரூஸ் வசம் வருகிறது. (அதே வேளையில் அந்த கொலை முயற்சி தோல்வியில் முடிந்தாலும் ஹிட்லரை கொல்ல அவருடய ராணுவத்தில் உள்ள மற்றவர்களும் சிலநிபந்தனைகளுக்கு பிறகு ஏற்று கொள்ளுகிறார்கள்.இதற்கு முக்கிய காரணம், தோல்வி உறுதி என்று தெரிந்தும் ஹிட்லர் போரை தொடர்ந்ததுதான். திட்டத்தின்படி ஹிட்லரை அவருடைய பிரத்தியோக ராணுவ மறைவிடத்தில் வைத்து கொல்லுவது என்பதையும் அவ்வாறு நடந்ததவுடன் யார் யார் என்ன என்ன பொறுப்புக்கு வர வேண்டும் என்ரும் முன்னமே முடிவு செய்ய படுகிறது.
திட்டத்தின்ப்படி ஹிட்லர் அவர் ராணுவ சாகக்களுடன் போர் நிலை பற்றி விசாரிக்கும் போது குண்டு வெடிக்கிறது. அதன்பிறகு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி அனைத்து நகர்வுகளூம் நிகழ்கிறது.
டாம்க்ரூஸால் கைதாணை பிறப்பிக்கபட்ட ஹிட்லரின் ஆளை கைது செய்ய போகும் போது அந்த ஆள் தொலைபேசியில் ஒருவரிடம் பேச சொல்லுகிறான் அது வேறு யாரும் அல்ல ஹிட்லரேதான்.
குண்டுவெடிப்பில் ஹிட்லர் சிறு காயங்களுடன் தப்பிவிட, இதை செய்ய முனைந்த ஒவ்வொருவரும் களையெடுக்கப்படுகிறார்கள்......
இதுதான் கதை சுருக்கம்...
படத்தில் தெரிந்துகொண்ட விசயங்கள்:-
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மிதவாதிகள் எப்படி ஹிட்லரின் ராணுவத்தில் இயங்கினார்கள் என்பதையும், இருதரப்புக்குமான போர் எப்படி தோல்வியில் முடியும் தரப்பை மனரீதியாக மாற்றம் கொள்ளவைக்கிறது என்பதையும், அவ்வாறான ஒரு சூழ்நிலையில், எப்படி தன்னையும் மற்ற இன்னபிறரையும் காக்க தயாராகிறது என்பதையும், வலியை உணர்ந்தவன் எப்படி சூழ்நிலையின்பால் வேறுபடுகிறான் என்பதையும் உணர்த்துகிறது.
டாம்க்ருஸின் மிகையில்லா நடிப்புக்கு மற்றும் ஒரு எடுத்துகாட்டு இந்தப்படம்.
படித்தின் காலம் 1940களில் என்பதால் ரொம்பவும் மெனக்கெட்டு உள்ளார்கள் செட் விசயத்தில்.
சரித்திரம் விரும்பும் அனைவரும் காணவேண்டிய படம். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.
இன்க்ளோரியஸ் பாஸ்டார்ட்ஸ்
இதுவும் இரண்டாம் உலக போர்சமயம் நடந்ததாக எடுக்கப்பட்ட படம். ஹிட்லரின் நாஜிபடையின் கொலை தாக்குதலில் இருந்துதப்பிக்கும் ஒரு பெண் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் வசிக்கிறார். அவரிடம் ஒரு ஜெர்மனிய ராணுவ அதிகாரி ஒருதலையாக காதலிக்கிறான். இதனிடையே ஜெர்மனிய விரர்களை கொல்லுவதே நோக்கமாக கொண்ட குழு ஒன்று பிரான்ஸ் முழுவதும் சுற்றித்திரிகிறது. (பிராட்பிட் தலைவன்). ஜெர்மனிய அதிகாரி அந்த பெண்ணின் மேல் கொண்ட காதலால் ஒரு சிறப்புக்காட்சிக்கு (தான் நடித்த) எற்பாடு செய்ய, அந்த நேரம் இந்த கொல்லும் குழுவும் அங்கே இருக்குமாறு கதை செல்லுகிறது.
இதேவேளையில் கொலை தாக்குதலில் தப்பித்த அந்த பெண் தன்னுடைய காதலனுடன் (ராணுவ அதிகாரி அல்ல, இவர் தியேட்டரில் பணிபுரியும் நீக்ரோ) அந்த திரை அரங்கை தீப்பிடிக்க வைக்க திட்டம் தீட்டுகிறாள். எந்த ஜெர்மானிய அதிகாரியிடம் இருந்து தப்பித்தாலோ, அவர் இந்த நாஜிக்களை கொல்லும் குழுவை கண்டறிந்து அவர்களின் திட்டத்தை கண்டறிந்து பிராட்பிட்டையும் அவருடைய ஒரு சாகவையும் கைது செய்கிறார்.
பம்பர் பரிசாக ஹிட்லரும் இந்த திரைப்படத்தை பார்க்க வருகிறார். பிராட்பிட் குழுவின் இருவர், யூத பெண் திட்டம் தெரியாமல் ஹிட்லரை கொல்ல அந்த தியேட்டரில் உள்ளனர். பிராட்பிட்டை கைது செய்யும் அதிகாரி அவர்களை தனியாக ஒரு இடத்திற்க்கு கொண்டு செல்லுகிறார்.
இதனிடையே காட்சி தொடங்கிவிடுகிறது. யூத பெண்ணின் திட்டப்படி படத்தின் 4வது ரீலில் அந்த பெண் நடித்த காட்சி தோன்றுகிறது. ஹிட்லரின் கனவு சாம்ராஜ்ஜியம் இப்போது வீழப்போகிறது என்று சொல்ல, அதேநேரம் அந்த நீக்ரோ காதலன் திரைக்குப்பின்னால் உள்ள ஃபிலிம் சுருள்களை தீப்பிடிக்க வைக்க, பிராட்பிட்டின் சாகக்கள் இருவர் ஹிட்லர் படம் பார்க்கும் கேபினுக்குள் சென்று அவர்களை சுட்டுவீழ்த்த, படம் கிட்டத்தட்ட முடிவுக்கு வருகிறது.
இதுநடக்கும் அதேசமயம், யூதபெண்ணை பார்க்கவரும் அந்த ராணுவ அதிகாரியும் யூதபெண்ணும் சண்டையிட்டு கொள்ளுகின்றனர். அப்படியே இருவரும் இருவரையும் சுட்டு கொல்லுகிறார்கள்.
ஹிட்லரின் மொத்த கூட்டமும் செத்தொழிகிறது.
இதனிடையே, பிராட்பிட்டை கைது செய்த அதிகாரி, அமெரிக்க ராணுவத்திடம் பேரம்பேசி சில சமரசம் செய்துகொள்ளுகிறார். அந்த சமரச ஒப்பந்தப்படி அவர் அமெரிக்க கூட்டுப்படையின் வசம் இருக்கும் எல்லையில் பிராட்பிட்டிடம் (சும்மானாச்சுக்கும்) சரணடையும் போது வழக்கமான முறையில் பிராட்பிட் அவருக்கு ஸ்வஸ்திக் முத்திரை பதிக்கிறார் அவர் நெற்றியில்.
படத்தில் எத்தனையோ காட்சிகள் பற்றி நான் சொல்ல நினைக்கிறேன் ஆனால் ஒரு படத்திற்க்கு இரண்டு காட்சிகள் பதம் என்பது போல...
பிராட்பிடை கைது செய்யும் அந்த அதிகாரி அவரிடம் இருந்து கைப்பற்றிய வெடிகுண்டை (டைம்பாம்) ஹிட்லர் அமரபோகும் சீட்டுக்கு கீழே வைத்து செல்லுகிறார், இது ஏன் என்றால், அவர் அமெரிக்க நேச நாட்டு படைகளிடம் பேரம் பேசி அப்படி சரிப்பட்டு வந்தால் பிராட்பிட் திட்டப்படி குண்டு வெடித்து ஹிட்லர் இறப்பார், ஒருவேளை அவ்வாறு பேரம் சரிப்பட்டு வரவில்லை என்றால், பிராட்பிட்டை காட்டிகுடுத்து, ஹிட்லரை கொல்லும் சதியில் இருந்த அவரை காப்பாற்றிய மாதிரி காட்டி மேலும் பதவி பெறலாம். இதற்காக அவர் பிராட்பிட்டிடம் பேசும் அந்த வசனங்கள் சூப்பர்ப்...
இறுதி காட்சியில் பிராட்பிட் அந்த ராணுவ அதிகாரியை சும்மனாச்சுக்கும் கைசெய்து கொண்டு செல்லும் முன்னால் பேசும் அந்த காட்சி, “ நீ பாட்டுக்கு பொது மன்னிப்பு வாங்கி, எதோ ஒரு தீவில் ஜாலியாக உன்னோட யுனிஃப்பார்மை கழட்டிட்டு போட்டுட்டு போய்டுவ, ஆனா நீ எந்த நேரமும் பழச மறக்காம இருக்க நான் என்ன பண்ண போறனா என்று சொல்லி அந்த அதிகார் நெற்றியில் ஸ்வஸ்திக் முத்திரை பதிக்கும் காட்சி அருமை....
முந்தைய படத்தில் (வால்கிர்) தப்பித்த ஹிட்லர் இதில் இறந்து போவது கண்டு நமக்கும் ஒரு நிம்மதி........
அந்த புத்தகம்:
டாலர் தேசம்.
இந்த புத்தகம் படித்து முடித்தவுடன் அதைப்பற்றி எழுதுகிறேன்.
நன்றிகளுடன்
தமிழுதயன்