.


உங்களுடைய தனிநபர் நிதி மேலாண்மை குறித்த சில ஆலோசனைகளுக்கும், தற்போதைய நிதி நிலையை மேலும் சிறப்பாக்கவும் வேண்டுமா? ஆம் எனில் இங்கே அழுத்தவும்.

Thursday, May 22, 2014

ரயிலடி வாழ்வு

நேற்று பெங்களூர் செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையத்தில் காத்திருந்த போது, பார்வையற்ற சுமார் 15 பேர் அந்த ரயில் நிலையத்தில் இரவு கடும் புழுக்கத்திலும், கொசு கடியிலும் உறங்க வந்தனர்... அவர்கள் நிலை கண்டு எழுதிய சிறு கவிதை இது...


#####################################################

கடும் வெயிலும், கணல் தகிக்கும் காற்றும்
கடந்து செல்லும் ரயிலதிவேகமும் விரலிடுக்கில்
செருகி கிடக்கும் எட்டுஎட்டு பொருளும்
என்றுமே தீராத வாழ்வின் நாட்களும்

விற்று தீராத மெய்பொருளும், விற்று
விட்டு விலகி வெகுநாளான மெய்யும்
பகல் இரவை பிரித்தறியா உணர்வுகளும்
பொருள் விற்ற களைப்பும், தினம்
இருமுறை மட்டுமே வெளியேறும் சிறுநீரும்

உடல் சோர்வால் இருள் கவிழ்ந்த
உலகறியும் தன்மையும் ருசியால் மட்டும்
பசியறியும் வண்ணமும் உழைத்துவிட்ட
ஒரு பொழுது உன்னை விட்டு சென்றதற்க்கு
அடையாளமாய் கண் அயரும் பொழுது

கண்ணிருந்தும் நான் வியக்கிறேன்!!!
உன் ஒரு நாள் பொழுதின் ரணம் என்
மொத்த வாழ்வின் ரணத்தை விட அதிகமானது
ஈவிரக்கமற்றது, முடிவில்லாதது, நாளையுமானது.....


No comments:

Post a Comment