http://yifyhdtorrent.com/movie/4663-the-ghost-writer
Wednesday, November 7, 2018
The Ghost Writer - நாம் யாரால் ஆளப்படுகிறோம்?
http://yifyhdtorrent.com/movie/4663-the-ghost-writer
இந்திய புதிய பொருளாதார கொள்கை - 1991 முதல் இன்று வரை
தொழில் வளர்ச்சியின் மூலமாக கடந்த 28 ஆண்டுகளில் ஏற்படுத்தபட்ட வேலை வாய்ப்புக்கள் என்பது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் மிகபெரிய பயனை தந்துள்ளது. அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் இந்த அளவு பெருக வேண்டுமாயின் கண்டிப்பாக தொழில் வளர்ச்சியின் மூலமாக மட்டுமே சாத்தியம். அந்த வகையில் தொழில் துறை வளர்ச்சியின் மூமலாக இந்தியாவின் இன்றைய 50% வேலை வாய்ப்புகள் 1991 பிறகே ஏற்படுத்தபட்டதாகும்.
வாங்கும் சக்தி
கட்டமைப்பு
புதிய தலைமுறை
சமன்பாடு இன்மை:-
நாணயத்தின் மறுபக்கத்தில் முதலும் பெரிதுமான தீமையில் சமன்பாடு இன்மை இருக்கிறது. ஒர் அரசு தான் கொண்டுள்ள கொள்கையின் மூலமாக எல்லா தர்ப்பு மக்களையும் 100 சதவீதம் பயன்பெறுமாறு வைப்பது இயலாது. அம்மாதிரி இடதுசாரி கொள்கையின் மூலமாக கூட செயல்படுத்த இயலாது, ஆனால் கொள்கையின் பயன்பாட்டு விகிதாச்சாரம் என்பது அனைத்து தரப்பினரையும் முடிந்த அளவு உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். சந்தை பொருளாதாரத்தின் அகப்பெரிய தீமை இந்த சமன்பாடுயின்மையாகும். 1991 ஆண்டிற்க்கு பிறகு இந்தியா இருப்பவர் இல்லாதவர் என்கின்ற இரு பிரிவினரை வெகு வேகமாக வளர்த்து வருகிறது. இந்த நிலைக்கு அரசே காரணம். தான் கொண்டுள்ள ஒரு கொள்கையின் விளைவு அல்லது முடிவு என்பது பெரும்பான்மை சமூகத்திற்க்கு பாதகமாக மாறும் என்றும் அந்த பாதகத்தை தன் அரசின் மற்றொரு துறை தவிர்க்க முடியும் ஆனால் தவிர்க்கவில்லை என்கின்ற போது ஒர் அரசின் ஒட்டுமொத்த தோல்வியாகதான் இதை பார்க்க முடியும், எனவே இந்த கொள்கையின் தீமையினை தடுக்க இதே அரசின் மற்றொரு துறை தடுக்க தவறிவிட்டது, (பெரும்பாலும் நிதி, சமூக முன்னேற்ற, பொது விநியோகம் போன்ற துறகள்) என்பது பொருளாதார கொள்கைக்கு கிடைத்த வெற்றிக்கு சம்பந்தமில்லாதது என்று கூறுவதை ஏற்க இயலாது. அதாவது பொருளாதாரம் வேகமாக வளர்கிறது அதை மட்டும் இந்த கொள்கை குறித்தான வெற்றி தோல்விக்கு அளவுகோலாக பார்க்க வேண்டும் என்று சொல்ல இயலாது. சமூக, நீதி, நிதி, சமத்துவ நிலைகளும் இந்த கொள்கையின் வெற்றி தோல்விக்கு காரணிகளாக எடுத்து கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்து கொண்டால் இந்த கொள்கை தீமையினை அதிகமாக தந்துள்ளது.
வளம் அழிதல்
ஒன்றை கொடுத்துதான் மற்றதை பெற இயலும் என்பது உலக நியதிகளில் ஒன்றாக மாறி வெகுநாளாகிவிட்டது. அந்த வகையில் 1991 பிறகு இந்தியா ஒட்டு மொத்தமாக இழந்துள்ள இயற்கை வளங்களுக்கும் அதற்கு ஈடான பண பலன் என்பதும் ஒன்றுக்கு ஒன்று சரிசமாக இல்லை. விவசாயத்தை பொரும்பான்மையாக கொண்டுருந்த ஒரு நாடு தன் வழியில் இருந்து பெருமளவு விலகும் போது தன் இயற்கை வளத்தை இழக்க தொடங்குகிறது. விவசாயத்தை ஒழிப்பது என்பது பெரும் நகரமயமாக்கல் என்பதில் தொடங்கி அனைத்து துறைகளையும் தொழில்மயமாமக்குதல் என்பது வரை இருக்கிறது, இந்தியாவில் இந்த கொள்கையினால் இழக்க பெற்ற இயற்கை வளங்கள் அனைத்து மீண்டும் மீட்டமைக்க கூடியது அல்ல. அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் வளங்கள் வெகு விரைவாக குறையும் போது, அது இயற்கை சீரழிவின் மூலமாக மட்டும் வெளிப்படும். துரதிருஷ்டவசமாக புதிய பொருளாதார கொள்கை என்பது இயற்கை மற்றும் செயற்கை (போர்) சீரழிவுகளை ஒரு பொருளாதார வாய்ப்பாக மட்டுமே பார்க்கிறது, உலக சந்தைக்கு, நாடுகளுக்கு பேரழிவுழிகள்தான் மிகப்பெரிய வருவாய் ஈட்ட கூடிய வாய்ப்புகளை தருகிறது. சமகாலத்தில் ஈராக்கும், இலங்கையும் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள் ஆகும்.
கடினமான மாற்றை முன்வைத்தல்
சந்தை பொருளாதார கொள்கைக்கு மாற்றாக இருப்பது என்பது நடுநிலை பொருளாதாரம் அல்ல. பொதுவுடமை பொருளாதாரமே சந்தை பொருளாதாரத்தின் மாற்றாகும், ஆனால் அம்மாதிரியான பொதுவுடமை பொருளாதார கொள்கை என்பது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மிக அதிமான உயிர் இழப்பின் பின்னால் மட்டுமே சாத்தியமாகும், காலமும் அதற்கு மிகுதியாக இருக்கும், இயற்கை வளங்கள் அனைத்தும் இழ்ந்துவிட்ட பின்பான பிறகே மாற்று குறித்தான சிந்தனை எற்படும், மேலும் பொருவாரியான இந்திய மக்கள் அனைவரும் இயல்பில் தன்னெழுச்சியற்றவர்கள், யாரேனும் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்கின்ற நம்பிக்கை ஜனநாயக அமைப்பு முறையில் கண்டிப்பாக சாத்தியமற்றதே. ஜனநாயக அமைப்பு முறை அவரவர் திறமைக்கு ஏற்ப திருடி பிழைக்க வாய்ப்பை தருகிறது என்பதே யதார்த்தம் ஆகும். 1989 ஆண்டு கம்யூனிச சீனாவில் தியென்மென் சதுக்கத்தில் ஜனநாயக போராட்டத்தில் கொல்லபட்டவர்களின் அளவை விட அதிகமான உயிரிழப்பின் மூலமாக இந்திய ஜனநாயகத்தில் பொதுவுடமை கொண்டு வர முடியும். 1858 முதல் 1947 வரையிலான சுதந்திர போரட்டத்தின் மொத்த உயிர் இழப்புகளை விட அதிகமான எண்ணிக்கையின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். மேலே சொன்னது போன்ற நிலை தோன்ற இன்னும் 25 ஆண்டு காலமாகும். இது அரசியல் கொள்கை முகை நரண். சர்வாதிகாரத்தில் (கம்யூனிச) இருந்து விடுபட்டு ஜனநாயகம் கிடைக்க தேவையான உயிரழப்பின் அளவை விட அதிகமான உயிரழப்பு இன்றைக்கு பொதுவுடமை தோற்றுவிக்க தேவைபடுகிறது. அதுவும் இன்றைக்கு கால அளவு அறியாமல் எந்த போரட்டமும் நடைபெறுவது இல்லை. அது ஜனநாயக போராட்டமாகட்டும், ஆயுத போராட்டமாகட்டும் இதுவே யதார்த்தம். பொதுவுடமை சிந்தாந்தத்தை கைகொள்ளும் இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் அறிந்த ஒர் உண்மை என்னவெனில், ஜனநாயக ரீதியாக என்றுமே இனி இவ்வுலகில் பொதுவுடமை பெற இயலாது. ஐம்பதாயிரம் சதுர கிலோமீட்டரில் ஆதிக்கம் செலுத்தும் மாவோயிஸ்ட்கள் கூட தங்களுக்கு இந்தியாவிடம் இருந்து விடுதலை வேண்டும் என்கிறார்களே ஒழிய இந்தியாவே விடுதலை பெற வேண்டும் என்று சொல்லுவதில்லை.
அரசியல் முரண்நகை
இந்தியாவின் தற்போதைய பொருளாதார கொள்கையை ஜனநாயக வழியில் எதிர்ப்பவர்கள் தங்கள் கொள்கையை இடத்திற்க்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிகொள்கிறார்கள், தெளிவான மாற்றத்தை முன் வைக்காத எந்த கொள்கையும் எல்லா நாளும் எல்லா வழியிலும் நன்மையை மட்டுமே தரவல்லதல்ல, இதற்கு மிக சிறந்த உதாரணங்கள் மேற்கு வங்கத்தின் சிங்கூரூம், கூடங்குளம் அணு மின்நிலையமும் ஆகும், சந்தை பொருளாதாரத்தை முன்னேடுக்க தன் எதிர் அணியே முயற்சித்து, விவசாய நிலங்களை பிடுங்கி கொள்ள பொதுவுடமை மாநில அரசு முயன்றதும், அதன் மூலமக அதிதீவிர இடதுசாரிகள் போராட்டம் நடத்தியதும் மிகபெரிய அரசியல் முரண்நகை, மாநில அரசுகள் மக்கள் போராட்டத்தை ஒடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளபட்டதும், அதுவும் தீவிர பொதுவுடமை கொள்கையுடைய ஒரு மாநில அரசு அசுர வேகத்தில் விளை நிலங்களை கையெகபடுத்த நினைத்ததும் சந்தை பொருளாதாரத்தின் தவறான கொள்கையினை உணர்த்துகிறது. தேவைபட்டால் தன் கையால் தன் கண்ணையே குத்த வைப்பதுதான் இந்த கொள்கையின் சிறப்பாகும். அதுபோலவே கூடங்குளமும், மிகபெரிய தீமையினை விபத்தின் மூலம் ஏற்படுத்த கூடிய வாய்ப்புள்ள ஒர் அணுமின் நிலையத்தை ஆதரித்த அரசியல் நிலைபாடு என்பது பொதுவுடமை கொள்கையாளர்கள் சரியான ஒரு சமயத்தில் தங்கள் கொள்கை கை கழுவுதலை எப்படி செயவார்கள் என்று அறிந்து கொள்ள உதவியது. முந்தைய சோவியத் ரஷ்யாவின் தயாரிப்பு என்பதாலயே அந்த அணுமின் நிலையத்தை ஏற்றுக்கொண்டதும், அதுவே அமெரிக்க 123 ஒப்பந்தத்தை அமெரிக்க இம்பிரியலிசம் (ஏகாதிபத்தியம்) என்று சொல்லி திரு.மன்மோகன் அரசுக்கான ஆதரவை விலக்கி கொண்டதும் பொதுவுடமை என்பதும் நேரத்திற்க்கு ஏற்ப மாற்றிகொள்ள கூடியதே என்று நாம் உணர்ந்தோம். இதுவே சந்தை பொருளாதாராத்தின் மற்றொரு தீமையாகும், தன் கொள்கைகளை ஏதிர்ப்பவர்களையே லாப நஷ்ட கணக்கு பார்க்க வைத்து இறுதியில் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை ஆதரிக்க வைத்து விடும் தன்மையுடது இந்த புதிய கொள்கை. இந்த கொள்கையின் மற்றொரு தன்மை என்னவென்றால், இதை நிறுத்த முடியாது, தடுக்கமுடியாது, தவிர்க்கமுடியாது ஆனால் இதை தடுக்க, நிறுத்த, தவிர்க்க போராட ஒர் வாய்ப்பை மட்டும் தரும், அந்த போராட்டம் வெற்றியை தருமா என்றால் உறுதியாக ஆம் என்று சொல்ல முடியாது.
ஒர் உலகம் ஒர் கொள்கை
1991 பிறகான நவீன இந்தியா என்பது ஒர் உலகம், ஒர் கொள்கை என்கின்ற நிலையை ஏற்றுகொள்ள தயாரகிவிட்டது, நாம் விரும்புகிறோமோ இல்லையோ முதலாம் சந்தை பொருளாதார நாடுகளின் கைபிடித்து நடந்து பழகி இன்று சந்தை பொருளாதார கொள்கை கண்டுபிடிப்பாளர்களை விட அதிமாக கடைபிடிக்கிறோம், நுகர்வு கலாச்சார பின்னணியில் பெரும் வேட்கையை தூண்டும் இந்த கொள்கையானது ஒட்டு மொத்த உலகத்தையும் ஒரே தேசமாக மாற்ற முயற்சிக்கிறது, இந்த முயற்சியின் போது பல்வேறு இன வரக்க கலச்சார முரண்பாடுகள் கொண்ட பல்வேறு இன குழுக்களை கொண்ட இந்தியாவை சிதைக்கிறது, ஒரே கொள்கையினை திணிப்பதின் மூலமாக பல்வேறு இனங்களை ஒரு அணியில் கலக்க செய்கிறது, நகரமயமாக்களையும், விவசாயத்தையும் இரு வேறு துருவங்களாக மாற்றுகிறது. இந்த கொள்கையினை எதிர்ப்பவர்களை மாதம் 25000 ரூபாய் சம்பளத்தில் உள்ள துணை ராணுவ படையினரை கொண்டு மிக கொடுரமாக சிதைக்கிறது. மொத்ததில் பாராம்பரியம் என்பதை வரலாறாக மாற்றுகிறது, உலகின் எந்த பகுதியில் எது நடந்தாலும் அதன் தீய பாதிப்புகளை பொருளாதார கணக்கீட்டின்படி அனைவரையும் சென்றடைகிறது. எங்கோ விளையும் ஒரு செயலின் விளைவு பொருளாதார கணக்கீடாக மாற்றபட்டு எங்கோ வசிக்கும் மக்களின் சுமையை அதிகரிக்கிறது, உலகை ஆள தொழில் குழுமங்களை ஏற்படுத்துகிறது, பிறகு அந்த தொழில் குழுமங்கள் நாடுகளை ஆள பிரதமர்களையும், அதிபர்களையும் தயார் படுத்துகிறது. சிரிப்பானாலும் அழுகையானலும் அதற்கு ஒர் விலை வைத்து வசூலிக்கிறது. உலகை ஒர் குடையின் கொண்டு வர ஆயராது பாடுபடுகிறது, எதிர்காலம் குறித்தான பயத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்துகிறது, எந்நேரமும் பொருளாதார வெற்றியையே சிந்திக்க வைக்கிறது, அதில் வெற்றி பெறுவதே அனைத்துகுமான வெற்றியாக சித்தரிக்கின்றது. பிறப்பின் பயனை அடைந்துவிட்டதாக தோன்ற வைக்கிறது. இவை அனைத்தும் தனிமனித வாழ்வில் இந்த கொள்கையின் விளைவால் ஏற்படுத்தபட்ட தீமையாகும்.
Thursday, May 22, 2014
ரயிலடி வாழ்வு
#####################################################
கடும் வெயிலும், கணல் தகிக்கும் காற்றும்
கடந்து செல்லும் ரயிலதிவேகமும் விரலிடுக்கில்
செருகி கிடக்கும் எட்டுஎட்டு பொருளும்
என்றுமே தீராத வாழ்வின் நாட்களும்
விற்று தீராத மெய்பொருளும், விற்று
விட்டு விலகி வெகுநாளான மெய்யும்
பகல் இரவை பிரித்தறியா உணர்வுகளும்
பொருள் விற்ற களைப்பும், தினம்
இருமுறை மட்டுமே வெளியேறும் சிறுநீரும்
உடல் சோர்வால் இருள் கவிழ்ந்த
உலகறியும் தன்மையும் ருசியால் மட்டும்
பசியறியும் வண்ணமும் உழைத்துவிட்ட
ஒரு பொழுது உன்னை விட்டு சென்றதற்க்கு
அடையாளமாய் கண் அயரும் பொழுது
கண்ணிருந்தும் நான் வியக்கிறேன்!!!
உன் ஒரு நாள் பொழுதின் ரணம் என்
மொத்த வாழ்வின் ரணத்தை விட அதிகமானது
ஈவிரக்கமற்றது, முடிவில்லாதது, நாளையுமானது.....
Friday, October 14, 2011
எதை நோக்கிய வாழ்வுமுறை?
மெல்ல தணியும் இரவு வாகன வெளிச்சம்
முன்னிரவை தழுவ முயற்சிக்கும் பின்னிரவு
புகை பரப்பி விரைந்தோடும் வாகனங்கள்
நெடுநாளைய தூக்கம் தொலைத்த பெண்கள்
ஜன்னல் அருகருகே அமர்ந்து அவதனித்து
காற்றில் கூந்தல் களைவதை அறியாமல்
செல்லும் அவ்விளம் பெண்ணின் முகம்
எதை நோக்கி இவ்வாழ்க்கை உனக்கு?
முறைமாறி உழைக்கும் இவ்வாழ்க்கை பயணம்
ஏற்றத்தை தரும் என்றா நினைத்தாய்?
எதை பெறுகிறாய் முன்னிரவுபத்து மணி முதலான
மறுநாள் காலை 8 மணியான வரைவாழ்க்கை
பின்பு ஓட்டமும் நடையுமான காலை வாழ்வு
நேரம் மாறி பெறும் தூக்கமும்
நேரம் மாறி பெறும் உணவும்
நேரம் மாறி பெறும் ஓய்வும்
மணிகூண்டை தலைகீழாய் மாட்டியதற்க்கு
ஒப்பாகும் என்றறிவாயா?
வெட்கமும் கோபமும் துக்கமும் சிரிப்பும்
அழுகையும் காதலும் காமமும் கண்ணீரும்
உலகமே உறங்கும் போது நீ பெறுகிறாய்
எதை நோக்கி இப்படி தலைகீழாய் ஒடுகிறாய்
பதில் தெரியாமல் படுத்துறங்கி போனேன்…..
- தமிழ் உதயன்
Monday, January 31, 2011
நாணயம் விகடனில் நான்
Thursday, December 9, 2010
வாழ்வு அழுத்தமும் தற்கொலைகளும்

உலகமய சூழலில் நகர வாழ்வு என்பது அதிக அழுத்தம் தருவதாக உள்ளது. இந்த அழுத்ததின் விளைவால் ஏழ கூடிய வாழ்வியல் கடும் சூழல் இன்று ஏழை எளியோர் தாங்க்கூடியதாக இல்லை. இந்த நிலையில் நகர மய அழுத்தம் என்பது தொழிலாளர்களைதான் அதிகமாக பாதிக்கிறது. கடந்த 11 மாதங்களில் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் 443 பேர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சூழல் என்பது தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இடங்களில் அதிகமாக நடைபெற முக்கிய காரணம் வாழ்வு முறை மாற்றங்கள் மட்டுமில்லாது பொருள் தேடும் வழிகளும் கடினமாகி வருவதுதான். முந்தைய பத்தாண்டுகளுக்கு முன்பு எவை எல்லாம் ஆடம்பாரமாக இருந்ததோ அது அனைத்தும் இன்றைக்கு அத்தியாவிசயமானதாகி விட்டது. அதிகரித்துவரும் நகரமயம் என்பது மிக முக்கியமாக மனிதன் வாழுமிடதிற்கான தேவை அதிகமாகி வீட்டு வாடகையில் அதிகம் செலவு செய்வதில் தொடங்குகிறது.
மனிதனின் இருப்பிட தேவைக்கு ஏற்ற நகரமயம்தான் இன்றைக்கு ஒழுங்கான நகரமயமாக இருக்க முடியும் ஆனால் இன்றைய நிலையில் வாழ்வில் பொருள் தேடி இடம் பெயரும் மனிதர்கள் மிக முக்கியமாக இருப்பிடத்திற்க்கு தருகிற வாடகை அதிகமாக உள்ளது. மனிதர்கள் வாழும் சூழல் அல்லாத இடத்தில் கூட இன்றைக்கு நகரத்திற்க்கு இடம் பெயரும் மனிதர்கள் வாழ்கிறார்கள். உலகமயம் தந்த நியான் வெளிச்ச கடைகளும், அமெரிக்க மோக வாழ்வு முறைகளும், அளவுகதிகமான விளம்பரங்களால் மனிதனின் வாங்கும் உணர்வை தூண்டும் நுகர்பொருள்களும், பகட்டான வாழ்வினை வாழ்வோரின் ஆடம்பரசெலவுகளும், அதிகரித்துவரும் விலைவாசி உயர்வுகளும் என்று பல காரணங்களால் இன்றைக்கு மனிதனின் நியாயமான தேவைகள் அதிகமாகிவிட்டன. இதன் விளைவாக மனிதன் தன்னுடைய திறமைக்கு மேலான சம்பாரிப்பை செய்ய வேண்டியுள்ளது. அத்தியாவிசய அடிப்படை தேவைகளை தாண்டியும் பெற இந்த சமூகம் ஒவ்வொரு மனிதனையும் பணிக்கிறது. இந்த முறையற்ற கால ஒட்டத்தில் வெறியுடன் பங்கு கொண்டால் ஒழிய நாம் வெல்ல முடியாது என்கிற நிலையினை சாதாரண மனிதன் உணர்ந்து வெகு நாட்கள் ஆகிறது. இப்படி ஒரு தன் ஒழுங்கில்லாத போட்டியின் விளைவால் ஏற்படுகிற விரக்தி முதலில் கடனில் தள்ளுகிறது. பிறகு அந்த கடனை அடைக்க முடியாத போது சண்டை சச்சரவை வளர்க்கிறது.
பெரும்பாலான தற்கொலைகள் அதாவது 40% தற்கொலைகள் இன்றைக்கு கடன் தொல்லையின் விளைவால் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்லுகிறது. அதற்கு அடுத்தபடியாக குடும்ப சச்சரவுகள் காரணமாக ஏற்படுவதாக சொல்லுகிறார்கள். இந்த அனைத்துக்குமே நன்கு உற்று நோக்கி அடிப்படை காரணத்தை கண்டறிந்தோமேயானால் அது பொருளாதார காரணமாகதான் இருக்கும் என்பது உண்மை. பிரச்சனைகளை கண்டு சாதாரண மனிதன் பயந்தது இல்லை, அப்படி பயந்திருந்தால் இன்றைக்கு அவன் இயற்கையை வெல்ல எத்தனிக்க மாட்டான். ஆனால் தனிமனித பிரச்சனைகளை கையாள இயலாத போது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியை / ஆலோசனையை நாட தயங்க கூடாது அப்போதுதான் மனிதன் தன்னை உணர முடியும் தன்னுடைய சவால்களையும் வெல்ல முடியும். மனிதகுலம் கண்டறிந்த தீமைகளிலேயே முக்கியமானது இரு தீமைகள்தான். அதில் ஒன்று, சகமனிதனை கொல்லுதல், இரண்டாவதாக தன்னை தானே அழித்து கொள்ளுதல் ஆகும். முதலாவதை முதலாளித்துவம் நேரடியாக செய்கிறது, இரண்டாவதை அது மறைமுகமாக செய்ய தூண்டுகிறது. உண்மையா இல்லையா சொல்லுங்கள்?
Wednesday, December 8, 2010
வடமுகங்களால் நிறையும் தென் இந்தியா
சமீப காலங்களாக தமிழகம் முழுவதும் பொது இடங்களில் நாம் ஒரு மாற்றத்தை காண்கிறோம். அந்த மாற்றமானது முக மாற்றம் ஆகும். பொது இடங்களில் நாம் முன்பு கண்டு வந்த தினக்கூலிகள், தொழிலாளர்கள் அனைவரும் வட இந்தியர்களாக மாறி வருவதுதான். முன்பு சிற்சில இடங்களில் பணி புரிந்து வந்த வட இந்தியர்களால் நிரம்பியுள்ளது. பெரும்பாலும் தொழிலாளர்களாகதான் இவர்கள் தென்படுகிறார்கள். பெரும் உணவகங்கள், மருத்துவமனைகள், சுகாதார பணியிடங்கள், கட்டிட பணிகள், தொழிலகங்கள், முக்கியமாக உடலை வருத்தும் பணிகளில் இவர்கள்தான் தென்படுகிறார்கள்.
இந்த இடமாற்றம் முக்கியமாக பிகார், உ.பி போன்ற மாநிலங்களில் இருந்து இங்கு வருபவர்களால்தான் அதிகமாக உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் மிக முக்கிய நன்மை தராத பலன் என்னவென்றால் கட்டுபாடில்லாத, அமைப்பிற்க்கு உட்படாத, ஒழுங்கற்ற நகரமயமாதல் ஆகும். (இதுவே மற்ற மலைசார்ந்த வட மாநிலங்களில் நடப்பது வேறு, அங்கு மக்கள் இடம்பெயராமல் இந்திய அரசின் சீருடை அணிந்த கொலைகார படைகளை எதிர்த்து போரிட்டு வருகிறார்கள்). இந்த நகரமயமாதல் என்பது இன்றைக்கு தமிழகத்தில் தெற்கு மாவாட்டத்தில் இருந்து மேற்கு மாவட்டங்கள் மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதை குறைந்துள்ளதை காட்டுகிறது. இந்த குறைவு தென் மாவட்ட மக்கள் வசதியாக வாழ தொடங்கி விட்டதால் ஏற்பட்டதா என்றால் இல்லை. இந்த வட இந்திய முகங்களின் எண்ணிக்கை அதிகமானது எதனால் என்றால், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வியாபார நிலங்களாக அதாவது மனை நிலங்களாக ஆக்கப்பட்டுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலத்தை விற்று கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள். மேலும் வேலை வாய்ப்பு உறுதி திட்ட்த்தின் கீழ் ஆண்டிற்க்கு 100 நாட்கள் வீதம் வேலைக்கு சென்றால் வருடம் ரூ. 10,000/- கிடைக்கிறது. அரிசி கிலோ 1 ரூபாய் வீதம் 20 கிலோவிற்க்கு ஆண்டிற்க்கு ரூ 240-ல் அரிசி கிடைக்கிறது உண்ண அது போதும். புத்துணர்வுக்கு ஊருக்கு ஒராயிரம் டாஸ்மாக் மதுகடையும், உலகை கண்டுகளிக்க அரசு தொலைக்காட்சியும் இருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க ஏன் பொருள் தேடி சென்னைக்கும், கோவைக்கும், திருப்பூருக்கும் செல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் இன்று வட இந்திய முகங்கள் இங்கு அதிகம் தென்பட காரணம் ஆகும்.
ஏற்கனவே இங்கு வேலை செய்யும் சொந்த மாநிலத்தவர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க கடும் போராட்டம் நிகழ்த்த வேண்டியுள்ள நிலையில் இந்த வட இந்தியர்கள் தங்கள் தொழிலாளர் நலன்களை யாரிடம் கேட்டு பெறுவர் அல்லது இவர்களுக்குகாக யார் குரல் கொடுப்பார்கள் என்பது அவசியம் பதில் தெரியவேண்டிய கேள்வி. ஒரு சின்ன உதாரணம், இன்று சென்னையில் கட்டப்பட்டு வரும் புதிய தலைமை செயலகம் முழுவதும் வட இந்திய தொழிலாளர்களால்தான் கட்டப்பட்டு வருகிறது. இந்த வேலையில் ஈடுபட்டு சில தொழிலாளர்கள் விபத்தில் உயிரையும் இழந்துள்ளனர். இவர்களில் யாராவது ஒருவர்க்காவது தொழிலாளர் நலன் குறித்தான உரிமைகள் தெரியுமா? அல்லது இவர்களுக்கு என்ன வகையான தொழிலாளர் நல உரிமைகள் அளிக்கப்படுள்ளது அல்லது உறுதி செய்யப்பட்டுள்ளது? இது எதுவுமே யாருக்கும் தெரியாது. இந்த மாநிலத்தின் நேரடி தொழிலாளர்களாக கருதப்பட வேண்டியவர்கள் அவர்கள் என்பது உண்மை. ஆனால் நடப்பது என்ன இன்னமும் கட்டிமுடிக்கபடாத அந்த கட்டிடத்திற்க்கு திறப்பு விழா நடந்து அதை கட்டிய தொழிலாளர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து ஆட்சியாளர்கள் கொண்டாடியதுதான் மிச்சம். இறந்து போன தொழிலாளர் குடும்பத்திற்க்கு அளிக்கப்பட்ட நிவாரணம் என்ன? வெறும் ரணம்தான் இம்மாதிரியானவர்களுக்கு கிடைக்கும் நிவாரணம் ஆகும்.
இன்னும் ஒரு முக்கிய நிலையில் இந்த வட இந்தியர்கள் பெருகி வருகின்றனர். எஞ்சி உள்ள விவசாய நிலங்களில் இவர்கள் தொழிலாளர்களாகவும் உழைத்துவருகின்றனர். நாள் முழுவதும் உழைக்கும் இவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தரப்படுகிறதா எனபதும் சந்தேகமே? ஏன் என்றால் விவசாய கூலியாக இன்றைக்கு நம் மாநிலத்தவர்கள் யாரும் வர தயாராக இல்லை. எனவே இவர்களை விவசாய கூலிகளாக பயன் படுத்துவோர் நியாயமான கூலியை தருகிறார்களா என்று உறுதி சொல்ல யாரும் இல்லை. இது தவிர திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் இவர்கள்தான் தற்போது கடும் உழைப்பை தர வேண்டிய சாய தொழிற்சாலைகளில் பணி புரிந்து வருகின்றனர். குறைந்த்து 15 மணி நேரம் இவர்கள் ஷிப்ட் முறைகளில் கசக்கி பிழியப்படுகின்றனர். மனித தன்மை அற்ற சில நிறுவன்ங்களில் கொத்தடிமைகளாக இவர்கள் பணிபுரியும் அவலவும் நிலவுகிறது. மனிதன் வாழும் நிலைகளில் அல்லாத சுகாதார கேடான இருப்பிடம், கழிப்பிடம் மற்றும் இவர்களுக்கான உணவு தயாரிப்பு என்று அனைத்தும் தரப்படுகிறது. மேலும் இவர்களில் சிலர் நடத்தும் திருட்டு போன்ற சமூக குற்றங்களால் தங்கள் மாநிலத்தை சேர்ந்த அனைவரையும் சிக்கலில் ஆழ்த்துகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டியவர்கள் யார்?
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உரைத்த நம் முன்னோர்கள் வாக்கிற்க்கு ஏற்ப நாம் திரைகடல் ஓடியும் திரவியம் தேடினோம். ஆனால் இன்று திரவியம் தேடாமல் வாழ்வில் பசிக்கு உணவு தேடத்தான் இவர்கள் இடம் பெயர்கிறார்கள். இவர்கள் இங்கு வந்து வாழ்வாங்கு வாழ்ந்து நம்மை ஆள போவது இல்லை. ஆனால் இவர்கள் ஒரு கண்ணியமான உழைத்து வாழ நினைக்கும் மக்கள். நாமே இவர்கள் தற்போது செய்யும் வேலையை முன்பு நாம் செய்தோம் என்பதை மறந்து முதலாளிகள் ஆகிவிட்டோம். இது வரலாறு நமக்கு கற்று தந்துள்ள மோசமான பாடங்களில் ஒன்றாகும்.
இந்த இடமாற்றம் இந்த சமூகத்தை எப்படி மாற்ற போகிறது என்று யாரும் எண்ணுவதாக காணோம். முக்கியமாக இந்த விஷயத்தில் ஏற்பட போகும் சமூக கலாச்சார மாற்றம் ஒர் எல்லைக்கு அப்பால் கண்டிப்பாக சிற்சில சீரழிவையும், மொழி வேற்றுமையையும் உண்டாக்கும். அந்த நிலை வராமல் தடுக்க வேண்டும் என்றால் மக்களின் மனங்களில் மாற்றம் உண்டாக வேண்டும். உலகமயமாக்கலின் ஒர் விளைவே இது. பல்வேறு வேறுபட்ட கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய பன்முகதன்மை வாயந்த சமூகமாக நாம் மாறவிட்டால் இது கண்டிபாக ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுக்கும். நம் மனங்களை மாற்றாவிட்டால் சமூக மாற்றங்கள் நமக்கு இனிக்காது. செய்வோமா நாம்?
