Thursday, May 22, 2014

ரயிலடி வாழ்வு

நேற்று பெங்களூர் செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையத்தில் காத்திருந்த போது, பார்வையற்ற சுமார் 15 பேர் அந்த ரயில் நிலையத்தில் இரவு கடும் புழுக்கத்திலும், கொசு கடியிலும் உறங்க வந்தனர்... அவர்கள் நிலை கண்டு எழுதிய சிறு கவிதை இது...


#####################################################

கடும் வெயிலும், கணல் தகிக்கும் காற்றும்
கடந்து செல்லும் ரயிலதிவேகமும் விரலிடுக்கில்
செருகி கிடக்கும் எட்டுஎட்டு பொருளும்
என்றுமே தீராத வாழ்வின் நாட்களும்

விற்று தீராத மெய்பொருளும், விற்று
விட்டு விலகி வெகுநாளான மெய்யும்
பகல் இரவை பிரித்தறியா உணர்வுகளும்
பொருள் விற்ற களைப்பும், தினம்
இருமுறை மட்டுமே வெளியேறும் சிறுநீரும்

உடல் சோர்வால் இருள் கவிழ்ந்த
உலகறியும் தன்மையும் ருசியால் மட்டும்
பசியறியும் வண்ணமும் உழைத்துவிட்ட
ஒரு பொழுது உன்னை விட்டு சென்றதற்க்கு
அடையாளமாய் கண் அயரும் பொழுது

கண்ணிருந்தும் நான் வியக்கிறேன்!!!
உன் ஒரு நாள் பொழுதின் ரணம் என்
மொத்த வாழ்வின் ரணத்தை விட அதிகமானது
ஈவிரக்கமற்றது, முடிவில்லாதது, நாளையுமானது.....


Friday, October 14, 2011

எதை நோக்கிய வாழ்வுமுறை?

bangalore-aunty-working-in-bpo-smoking

மெல்ல தணியும் இரவு வாகன வெளிச்சம்

முன்னிரவை தழுவ முயற்சிக்கும் பின்னிரவு

புகை பரப்பி விரைந்தோடும் வாகனங்கள்

நெடுநாளைய தூக்கம் தொலைத்த பெண்கள்

ஜன்னல் அருகருகே அமர்ந்து அவதனித்து

காற்றில் கூந்தல் களைவதை அறியாமல்

செல்லும் அவ்விளம் பெண்ணின் முகம்

எதை நோக்கி இவ்வாழ்க்கை உனக்கு?

முறைமாறி உழைக்கும் இவ்வாழ்க்கை பயணம்

ஏற்றத்தை தரும் என்றா நினைத்தாய்?

எதை பெறுகிறாய் முன்னிரவுபத்து மணி முதலான

மறுநாள் காலை 8 மணியான வரைவாழ்க்கை

பின்பு ஓட்டமும் நடையுமான காலை வாழ்வு


நேரம் மாறி பெறும் தூக்கமும்

நேரம் மாறி பெறும் உணவும்

நேரம் மாறி பெறும் ஓய்வும்

மணிகூண்டை தலைகீழாய் மாட்டியதற்க்கு

ஒப்பாகும் என்றறிவாயா?

வெட்கமும் கோபமும் துக்கமும் சிரிப்பும்

அழுகையும் காதலும் காமமும் கண்ணீரும்

உலகமே உறங்கும் போது நீ பெறுகிறாய்

எதை நோக்கி இப்படி தலைகீழாய் ஒடுகிறாய்

பதில் தெரியாமல் படுத்துறங்கி போனேன்…..

- தமிழ் உதயன்

Monday, January 31, 2011

நாணயம் விகடனில் நான்

என் பேட்டி நாணயம் விகடனில் வெளிவந்துள்ளது. 5.2.2011 இதழ்.
சும்மா ஒரு பக்கம்தான். இதுக்காக இவ்வளவு விளம்பரமா என்று கேட்க வேண்டாம். ஏதோ நம்மால முடிஞ்சது.